உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தென்மண்டல குத்துச்சண்டை போட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

தென்மண்டல குத்துச்சண்டை போட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த நென்மேலியில் உள்ள ஸ்ரீகோகுலம் பொதுப்பள்ளி வளாகத்தில், தென்மண்டல அளவிலான சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான குத்துச்சண்டை மற்றும் யோகாசன போட்டிகள் நடந்தன.அதன் நிறைவு விழா, பள்ளியின் தலைவர் கோகுலம் கோபாலன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. பள்ளியின் துணைத் தலைவர்கள் லிஜிஷா பிரவின், பிரவின் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சங்கரநாராயணன் வரவேற்றார்.இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் பங்கேற்று, போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களும், இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளி பதக்கங்களும் வழங்கினார்.மேலும், குத்துச்சண்டை போட்டியில், அனைத்து நிலைகளிலும் முதல், இரண்டு இடம்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு, கோப்பை வழங்கப்பட்டது.இதில், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.எ., பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அரசு, குத்துச்சண்டை வீரர் மதிவாணன், உடற்பயிற்சி இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முன்னதாக, குத்துச்சண்டை, யோகாசன போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !