மின்வாரிய அலுவலருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டி எதிர்ப்பு
குன்றத்துார்:குன்றத்துார் நகராட்சியில், சில நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், குன்றத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குன்றத்துார் மக்கள் என்ற பெயரில் மர்ம நபர்கள் சுவரொட்டிகள் ஓட்டியுள்ளனர்.அதில், குன்றத்துார் மின்வாரிய உதவி பொறியாளர் மகேஸ்வரி பொதுமக்களின் அவசர தொலைபேசி அழைப்பை எடுப்பதில்லை, நேரில் சென்றாலும் அலட்சியாக பதில் கூறிகிறார்.புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்துகிறார் அவரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.