மேலும் செய்திகள்
குறைதீர்க்கும் கூட்டம் 321 மனுக்கள் ஏற்பு
20-May-2025
செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் கலெக்டர் அருண் ராஜ் தலைமையில் நடைபெற்றது.குடிநீர், சாலை வசதி, வீட்டுமனைபட்டா உள்ளிட்ட 446 கோரிக்கை மனுக்களை பொது மக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் தொடர்பான சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் அருண் உத்தரவிட்டார். மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 6ம் தேதி மதுரை, விருதுநகர் தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்பச்சுற்றுலா சென்றனர். ஏற்பாடு செய்த கலெக்டருக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் நன்றி தெரிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. 2022ம் ஆண்டு கொடி நாள் நிதி ஐந்து லட்சத்திற்கு மேல் வசூலித்த 13 அலுவலர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
20-May-2025