மேலும் செய்திகள்
சிங்கபெருமாள் கோவிலில் தலைமறைவு குற்றவாளி கைது
18-Sep-2024
மறைமலை நகர் : செங்கல்பட்டு அடுத்த அனுமந்தை கிராமத்தில் உள்ள வீட்டில், கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக, செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, அனுமந்தை கிராமத்தில் பள்ளத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 1,283 புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மது விற்பனையில் ஈடுபட்ட சேஷக்குமார், 27, என்பவரை கைது செய்து, விசாரணைக்கு பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
18-Sep-2024