உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு தகுதிச்சான்று

செங்கையில் பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு தகுதிச்சான்று

செங்கல்பட்டு,:செங்கல்பட்டில் தனியார் பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த 28 வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகாக்களில் செயல்படும் தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகள், தங்களது நிறுவன வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். அந்த வகையில், இந்நிறுவனங்களைச் சேர்ந்த 29 வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெற, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு செய்திருந்தனர். அதன் பின், வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமையில், பறக்கும் படை வட்டார போக்குவரத்து அலுவலர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் பகுதி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மேற்கண்ட வாகனங்களை, நேற்று ஆய்வு செய்தனர். இதில், 28 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதிச்சான்று வழங்கப்பட்டது. ஒரு வாகனம் விதிமுறைகளை கடைபிடிக்காததால், தகுதிச்சான்று நிறுத்தி வைக்கப்பட்டதாக, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை