உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குவாரி லாரிகளால் பெருவெளி சாலை நாசம்

குவாரி லாரிகளால் பெருவெளி சாலை நாசம்

சி த்தாமூர் அருகே மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் இருந்து, பெருவெளி கிராமத்திற்குச் செல்லும் தார்ச்சாலை உள்ளது. இது கொளத்துார், பெருவெளி, நல்லாமூர், கோட்டிவாக்கம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலையாக உள்ளது. இப்பகுதியில் செயல்படும் கல்குவாரியில் இருந்து அதிக பாரம் ஏற்றிக்கொண்டு, தினமும் ஏராளமான லாரிகள் இந்த சாலையில் செல்கின்றன. இதனால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல லாயக்கற்றதாக மாறி உள்ளது. சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். தற்போது, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சாலை வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பெருவெளி கிராம சாலையை சீரமைக்க வேண்டும். - வேலன், நல்லாமூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை