உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிளாம்பாக்கம் பஸ் முனையம் எதிரே அணுகு சாலையில் மழைநீர் தேக்கம்

கிளாம்பாக்கம் பஸ் முனையம் எதிரே அணுகு சாலையில் மழைநீர் தேக்கம்

கூடுவாஞ்சேரி : வண்டலூர் அடுத்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, அணுகு சாலையில் மழை நீர் தேங்கி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த முடியாதபடி உள்ளது.தென் மாவட்டங்களில் இருந்து, சென்னை நோக்கி வரும் பயணியர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி., சாலையோரம் இறங்குகின்றனர்.அவ்வாறு இறங்கும் பயணியர் சாலையை கடந்து, கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையம் சென்று, தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு, மாநகர பேருந்து வாயிலாக செல்கின்றனர்.சமீபத்தில் பெய்த மழையால், பேருந்து முனையம் எதிரே உள்ள அணுகு சாலையில், மழைநீர் சீராக செல்லாமல் தேங்கிஉள்ளது. இதனால், பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த முடியாதபடி சிரமம் அடைந்து வருகின்றனர்.மேலும், தேங்கிய மழை நீரை அகற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.இப்பகுதியில் மழைநீர் தேங்காதவாறு பல கோடி ரூபாய் செலவில் சுரங்கப்பாதை அமைத்து, மழை நீர் சீராக செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.இருந்த போதிலும், மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தேங்கிய மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை