உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ராஜலட்சுமி கல்லுாரி அணிகள் டேபிள் டென்னிசில் சாம்பியன்

ராஜலட்சுமி கல்லுாரி அணிகள் டேபிள் டென்னிசில் சாம்பியன்

சென்னை: அண்ணா பல்கலைக்கு உட்பட்ட பொறியியல் கல்லுாரிகளை பல்வேறு மண்டலங்களாக பிரித்து, விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. அந்தவகையில் இரண்டாவது மண்டல அளவில் மாணவர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி, தண்டலத்தில் உள்ள ராஜலட்சுமி கல்லுாரியில் நடந்தது. இதில், 18 அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், ராஜலட்சுமி கல்லுாரி அணி, 3 - 1 என்ற செட் கணக்கில் வெங்கடேஸ்வரா அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேபோல, கிண்டியில் நடந்த பெண்களுக்கான மண்டல டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில், ராஜலட்சுமி பொறியியல் அணி மற்றும் வெங்கடேஸ்வரா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில், 3 - 1 என்ற செட் கணக்கில் ராஜலட்சுமி அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி