மேலும் செய்திகள்
பள்ளி மாணவி பலாத்காரம் இருவருக்கு ஆயுள் தண்டனை
06-Nov-2024
செங்கல்பட்டுசெங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 7 வயது சிறுமி, 2020ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி, தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, பொன்விளைந்தகளத்துார் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கார்த்திக் என்கிற காத்தவராயன், 37, என்பவர், சிறுமியை கடத்திச்சென்று, பாலியல் பலாத்காரம் செயதார்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நடந்து வந்தது. நேற்று நடந்த விசாரணையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், கார்த்திக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமாபானு தீர்ப்பளித்தார்.அபராதத் தொகையை கட்டத்தவறினால், கூடுதலாக ஓராண்டு மெய்க்காவல் சிறை தண்டனை வழங்கப்படும். அதன்பின், அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
06-Nov-2024