உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏரியில் மிதந்த ஆண் உடல் மீட்பு

ஏரியில் மிதந்த ஆண் உடல் மீட்பு

பெருங்களத்துார்:பெருங்களத்துாரில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டியுள்ள பீர்க்கன்காரணை ஏரியில் ஆண் உடல் மிதப்பதாக, நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற பீர்க்கன்காரணை போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர். உடலில் காயங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்த நபர் ஆலப்பாக்கம், எஸ்.எஸ்.எம்., நகரைச் சேர்ந்த சுதர்சன், 50, என தெரிந்தது. இதுகுறித்து, பீர்க்கன்காரணை போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி