மேலும் செய்திகள்
ரோட்டோர சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்
22-Sep-2024
சித்தாமூர், சித்தாமூர் பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு இடையே, 25 கி.மீ., துாரமுள்ள இருவழி சாலை உள்ளது. இச்சாலை மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.இந்த சாலையை, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சென்னை மற்றும் புதுச்சேரிக்கு சென்றுவர பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில், புதர்கள் மண்டி கருவேல மரங்கள் வளர்ந்து, சாலையில் நீண்டு வளர்ந்து இருந்தன.இச்செடிகளின் கிளைகள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செடி, கொடிகள், பட்டுப்போன மரங்கள் மற்றும் கருவேல மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.பருவமழையின் போது போக்குவரத்து பாதிக்கப்படுவதை தடுக்க, சாலையில் உள்ள சிறுபாலங்களில் அடைத்துள்ள புதர்களை அகற்றி வருகின்றனர். மேலும், மழைநீர் வடிகால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் சூணாம்பேடு - பெரும்பேர் சாலை, கடுக்கலுார் - கல்பட்டு சாலை, பெரும்பேர் - ஒரத்தி போன்ற சாலைகளில் நடந்து வருகின்றன.
22-Sep-2024