செக்கடிதாங்கல் ஏரி உபரி நீர் வெளியேறும் பகுதி சீரமைப்பு
திருப்போரூர்:திருப்போரூர் பகுதி குடியிருப்பு, மலைப்பகுதி, வனப்பகுதிகளிலிருந்து வழிந்தோடும் மழை நீர், நாகலேரியை நிரப்பி, நெம்மேலி செல்லும் சாலை ஒட்டியுள்ள செக்கடிதாங்கல் ஏரியில் கலக்கும்.பல ஆண்டுகளுக்கு முன், மேற்கண்ட நாகலேரி ஆக்கிரமிக்கப்பட்டு, பயன்பாடில்லாமல் கைவிடப்பட்டது. நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், செக்கடிதாங்கல் ஏரி மட்டும் உள்ளது.இந்த ஏரி, 100 ஏக்கர் பரப்பில் தேங்கும் நீரில், 500 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. இதில், இரண்டு பிரதான மதகுகள் மற்றும் மூன்று நீர்pபாசன கால்வாய்கள் உள்ளன.இந்த ஏரியின் கிழக்கு புறத்தில் விவசாய நிலங்களும், மேற்கு புறத்தில் குடியிருப்பு வீடுகளும் உருவாகின. மேற்கு புறத்தில் உருவாக்கப்பட்ட குடியிருப்பு வீடுகளால் ஆக்கிமிப்புகள் ஏற்பட்டு, ஏரியின் அளவு சுருங்கிக்கொண்டே வருகிறது.ஏரியை ஒட்டியுள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கிழக்கு மாடவீதிகளில் உள்ள வடிகால்வாய் வழியாக, ஏரியில் விடப்படுகிறது. இதனால், ஏரி நீர் தன்மை பாதிக்கப்படுவதுடன், நீர்வள ஆதாரமும் குறைகிறதுஇது ஒருபுறம் இருக்க, ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், திருப்போரூர்- - நெம்மேலி சாலையின் குறுக்கேயும், அச்சாலையை ஒட்டியும் கடந்து செல்கிறது.அங்கு, புதர் சூழ்ந்து கிடப்பதால், உபரி நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், நீர்வளத்துறை சார்பில், ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறும் இடத்தில், பொக்லைன் இயந்திரம் வாயிலாக குப்பை கழிவுகள், முட்செடிகள், புதர்களை அப்புறப்படுத்தி சீரமைக்கும் பணி நேற்று நடந்தது.