மேலும் செய்திகள்
ஆம்புலன்ஸ் 'மக்கர்' ; பழங்குடியினர் தவிப்பு
15-Nov-2024
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மானாமதி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, மானாமதி உட்பட சுற்று வட்டாரங்களை சேர்ந்த, 30,000த்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். ஒரு நாளைக்கு, 100க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பாக, பழங்குடியின மக்கள் உட்பட ஏழை, எளிய மக்கள் தான் அதிகமாக சிகிச்சைக்கு வருகின்றனர்.இம்மருத்துவமனையில், அவசர சிகிச்சையின் போது செங்கல்பட்டு, திருப்போரூர் போன்ற மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.அந்நேரத்தில் ஆம்புலன்ஸ் தேவைப்படும்போது திருப்போரூர், திருக்கழுக்குன்றம், பூஞ்சேரி, மாமல்லபுரம் போன்ற இடங்களிலிருந்து வரவழைக்க வேண்டியுள்ளது.இதனால், நேர விரயம் ஏற்பட்டு, நோயாளிகள் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, மானாமதி மருத்துவமனையிலேயே தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15-Nov-2024