கல் குவாரி அமைக்க கருத்து கேட்பு
செய்யூர்: செய்யூர் அருகே மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவெண்மணி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், 22 ஏக்கர் பரப்பளவில் புதிய கல் குவாரி அமைக்க, இப்பகுதி கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், செய்யூர் அடுத்த புத்துார் கிராமத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது. மதுராந்தகம் ஆர்.டி.ஓ., ரம்யா, மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் பங்கேற்றனர். கல் குவாரி அமைய உள்ள இடம், வேலைவாய்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விவரிக்கப்பட்டு, பின் அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதையடுத்து, கல் குவாரியால் பாதிப்பு ஏற்படும் என, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.