உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூவத்துார் சாலை விரிவாக்க பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்

கூவத்துார் சாலை விரிவாக்க பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்

பவுஞ்சூர் :பவுஞ்சூர் அருகே கடுகுப்பட்டு பகுதியில், மதுராந்தகம் - கூவத்துார் செல்லும் சாலை உள்ளது.இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மதுராந்தகம், பவுஞ்சூர், கூவத்துார், செய்யூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல, இந்த பிரதான சாலையை அப்பகுதிவாசிகள் பயன்படுத்துகின்றனர்.சாலை குறுகலாக இருப்பதால், இப்பகுதியில் செயல்படும் கல் குவாரிகள் மற்றும் கிரஷர்களுக்கு வந்து செல்லும் லாரிகளால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன், நெடுஞ்சாலைத்துறை சார்பாக, 7 மீட்டர் உள்ள சாலையை, கூடுதலாக 1.5 மீட்டர் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.சாலை ஓரத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்டது. ஆனால், தற்போது வரை சாலை அமைக்கப்படாமல், சாலை விரிவாக்கப் பணி நிறுத்தப்பட்டுள்ளதால், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து சாலை விரிவாக்கப பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி