ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
மதுராந்தகம்:சென்னை-- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, உத்திரமேரூர் வழியாக காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரம் புக்கத்துறை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கோடி தண்டலம், நடராஜபுரம், சமத்துவபுரம், புக்கத்துறை, தபால் மேடு உள்ளிட்ட பகுதியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.முப்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் சிதிலமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.தற்போது, உயர்நிலைப் பள்ளி அருகே உள்ள இ-- சேவை மைய கட்டடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகிறது.எனவே, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.