உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீரபோகம் கிராம ரேஷன் கடைக்கு புது கட்டடம் அமைக்க கோரிக்கை

வீரபோகம் கிராம ரேஷன் கடைக்கு புது கட்டடம் அமைக்க கோரிக்கை

பவுஞ்சூர்:வீரபோகம் கிராமத்தில், பழுதடைந்துள்ள நியாய விலைக்கடை கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.பவுஞ்சூர் அருகே வீரபோகம் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, நியாய விலைக்கடை செயல்படுகிறது. இந்த கடை வாயிலாக, 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழுதடைந்த கட்டடத்தில், தற்போது நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது.கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, தளத்தில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, மோசமான நிலையில் உள்ளது.மழைக்காலத்தில் தளத்தில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஒழுகி அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் நனைவதால், அவற்றை பாதுகாக்க விற்பனையாளர்கள் சிரமப்படுகின்றனர்.இதனால், போதிய அளவு அத்தியாவசிய பொருட்களை சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வீரபோகத்தில் உள்ள பழைய நியாய விலைக்கடை கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை