உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மகேந்திரா சிட்டி ஜி.எஸ்.டி., சாலையில் நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை

மகேந்திரா சிட்டி ஜி.எஸ்.டி., சாலையில் நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை

மறைமலை நகர், மகேந்திரா சிட்டி ஜி.எஸ்.டி., சாலையில் நடை மேம்பாலம் அமைக்க, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில், 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், ஆயிரக்கணக்கான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவை உள்ளன. சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, தினமும் பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள வீராபுரம், அஞ்சூர், செட்டி புண்ணியம் கிராம மக்கள், ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பை கடந்து தாம்பரம், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் எட்டு வழிச்சாலையாக ஜி. எஸ்.டி., சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த பகுதியில் நடைமேடை மேம்பாலம் இல்லாததால் பாதசாரிகள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடைமேடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை