உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொட்டமேடு 4 முனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை

கொட்டமேடு 4 முனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை

திருப்போரூர்:கொட்டமேடு நான்கு முனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் -- செங்கல்பட்டு இடையே, கொட்டமேடு சந்திப்பு உள்ளது. இங்கிருந்து, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, திருப்போரூர், மானாமதி என, நான்கு சாலைகள் பிரிந்து செல்கின்றன. நான்கு புறங்களிலும் தாறுமாறாக வாகன ஓட்டிகள் திரும்பி செல்கின்றனர். கொட்டமேடில் சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு, மதுப்பிரியர்களும் அதிக அளவில் வருகின்றனர். எனவே, அப்பகுதியில் விபத்தை தவிர்க்க, கொட்டமேடு நான்கு முனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !