உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அபாய நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்ற வேண்டுகோள்

அபாய நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்ற வேண்டுகோள்

மதுராந்தகம்:பூதுாரில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுராந்தகம் ஒன்றியம், பூதுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஈசூர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் குழாய் வாயிலாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்த நிலையில், துாண்களில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.இதனால், தொட்டி உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.எனவே, பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ