உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பழைய நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டுகோள்

பழைய நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டுகோள்

மறைமலை நகர்:அனுமந்தபுரம் கிராமத்தில், பாழடைந்த நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டு மென, கிராமத்தினர் வேண்டு கோள் விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சி யில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கெங்கையம்மன் கோவில் அருகில், கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, 25 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, குழாய் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்ததால், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, 2023 -- 24ம் ஆண்டு,'ஜல் ஜீவன் மிஷன்' சேமிப்பு நிதியில் இருந்து 27 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது, இந்த புதிய தொட்டி மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பழைய நீர்தேக்கத் தொட்டி இதுவரை இடிக்கப்படவில்லை. இதைச் சுற்றி வீடுகள் உள்ளதால், தொட்டி இடிந்து விழுந்து விபத்து ஏற்படுமோ என, கிராமத்தினர் அச்சப்படுகின்றனர். எனவே, பயன்பாட்டில் இல்லாத பழைய நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டு மென, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ