பவுஞ்சூரில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டுகோள்
பவுஞ்சூர்: பவுஞ்சூரில், நடைபாதையுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பவுஞ்சூர் பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனா ல், பவுஞ்சூர் பஜார் பகுதியில் பூங்கா வசதி இல்லாமல், விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களில், குழந்தைகள் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள், மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில் காலை மற்றும் மாலை நேரத்தில், நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு நடைபயிற்சி செல்லும் போது, விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பவுஞ்சூர் பஜார் பகுதியில் ஆய்வு செய்து, அங்கு நடைபாதையுடன் கூடிய சிறுவர் பூங் கா அமைக்க வேண்டும். அத்துடன், விளையாட்டு உபகரணங்களையும் அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.