உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேளச்சேரி -- அச்சரவாக்கம் பஸ் மானாமதிக்கு நீட்டிக்க கோரிக்கை

வேளச்சேரி -- அச்சரவாக்கம் பஸ் மானாமதிக்கு நீட்டிக்க கோரிக்கை

திருப்போரூர்:வேளச்சேரி - அச்சரவாக்கம் இடையே இயக்கப்படும் பேருந்தை, மானாமதி வரை நீட்டிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய செம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அச்சரவாக்கம் கிராமத்திற்கு, வேளச்சேரியில் இருந்து 'தடம் எண் 551' என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது.இப்பேருந்து மேடவாக்கம், பொன்மார், மாம்பாக்கம் வழியாக, அச்சரவாக்கம் வருகிறது. மானாமதியைச் சுற்றியுள்ள கிராமத்தினர் மேற்கண்ட தடத்தில் அன்றாட தேவைகளுக்கு செல்கின்றனர்.எனவே, பேருந்தை, மானாமதி வரை நீட்டித்தால், இப்பகுதியினருக்கு மிகப்பெரிய உதவியாக அமையும் என, பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி