மேலும் செய்திகள்
ஆபத்தான சாலை வளைவுகளில் வேகத்தடை அமைக்கப்படுமா?
24-Feb-2025
திருப்போரூர்:திருப்போரூர் அருகே ஆபத்தான சாலை வளைவுகளில், விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.ஓ.எம்.ஆர்., சாலையில், திருப்போரூரில் இருந்து, மாமல்லபுரம் செல்லும் சாலை உள்ளது.இந்த சாலையை, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்த சாலையில் தண்டலம் பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி, தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள பகுதிகளில், ஆபத்தான சாலை வளைவுகள் உள்ளன.இந்த சாலை வளைவில் போதிய வேகத்தடை மற்றும் போக்குவரத்து எச்சரிக்கை பதாகைகள் இல்லை.இதனால் பகல், இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சாலை வளைவில் எதிரே வரும் வாகனங்கள் மீதும், மையத் தடுப்பிலும் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, மேற்கண்ட சாலையில் உள்ள ஆபத்தான வளைவில், வேகத்தடை அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24-Feb-2025