உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவிலில் கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை

சிங்கபெருமாள் கோவிலில் கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் , திருத்தேரி, பாரேரி சத்யா நகர், விஞ்சியம்பாக்கம், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் வாடகைக்கு தங்கி மகேந்திரா சிட்டி, ஒரகடம், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய தெருக்களின் சந்திப்புகளில் 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் குற்றச் சம்பவங்கள் மற்றும் விபத்துகள் நேரிடும் போது குற்றவாளிகளை கண்டுபிடிப்பது போலீசாருக்கு கடும் சவாலாக உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சிங்கபெருமாள் கோவிலை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.இந்த பகுதியில் நடைபெறும் மொபைல் போன் பறிப்பு, செயின் பறிப்பு போன்றவைகளை அடையாளம் காண கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் மறைமலை நகர் போலீசாருக்கு சவாலாக உள்ளது.எனவே ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாரேரி, திருத்தேரி, பகத்சிங் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை