உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு புறவழிச்சாலை பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுகோள்

செங்கல்பட்டு புறவழிச்சாலை பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுகோள்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புறவழிச்சாலையில், கோடை வெயிலுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், புறவழிச்சாலை மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அணுகு சாலையில், சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று, பயணியரை ஏற்றி, இறக்கிவிட்டுச் செல்கின்றன.இதேபோன்று, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகளும், சர்வீஸ் சாலையில் நின்று, பயணியரை ஏற்றி, இறக்கிவிட்டுச் செல்கின்றன.மேம்பாலத்தின் கீழ் பகுதியில், காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகளில் பயணியர் ஏறிச் செல்கின்றனர்.இங்கு, நீண்ட நேரம் பேருந்திற்காக காத்திருக்கின்றனர். இப்பகுதியில் குடிநீர் வசதி இல்லாததால், பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குடிநீர் வசதி செய்து தர, நகராட்சி நிர்வாகம் மற்றும் திம்மாவரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.தற்போது, கோடைக்காலம் என்பதால், வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், பயணியருக்கு குடிநீர் அவசியம் தேவைப்படுகிறது. எனவே, பயணியர் நலன் கருதி, புறவழிச்சாலையில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ