உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரேஷன் கடைகளில் குடிநீர் வைக்க கோரிக்கை

ரேஷன் கடைகளில் குடிநீர் வைக்க கோரிக்கை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. இந்த தாலுக்காக்களில், 517 ரேஷன் கடைகள் முழு நேரமும், 381 ரேஷன் கடைகள் பகுதி நேரமும் என மொத்தம் 898 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நிழற்குடைகள் இல்லாததால், திறந்த வெளியில் நின்று பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அனைத்து ரேஷன் கடைகளில், நுகர்வோர்களுக்கு குடிநீர் மற்றும் பந்தல் வசதி ஏற்படுத்த வேண்டும் என, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் கலெக்டருக்கு, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி