உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வில்லியம்பாக்கம் டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

வில்லியம்பாக்கம் டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வில்லியம்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராம மக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் வில்லியம்பாக்கம் -- சாஸ்திரம்பாக்கம் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.இங்கு சுற்றியுள்ள வெண்பாக்கம், ரெட்டிபாளையம், ஆத்துார் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்தோர் மது வாங்குகின்றனர். இவர்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் அமர்ந்து மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை வயல்வெளியில் வீசி செல்கின்றனர். வாகனங்களில் வருவோர் தங்களின் வாகனங்களை சாலை வளைவு மற்றும் ஓரங்களில் நிறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.எனவே இந்த டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை