உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

செய்யூர், :செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 21 வது வார்டு வெண்ணாங்குப்பட்டு பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் தார் சாலை உள்ளது.இந்த சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.மேலும் கோட்டைக்காடு,வேம்பனுார் பகுதியில் இருந்து வெண்ணாங்குப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவியர் இந்த சாலை வழியாக தினசரி பள்ளிக்கு சென்று வருகின்றனர்.சாலை கடந்த 15 ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர் கடும் அவதிப்படுகின்றனர்.ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை