உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மழைநீர் கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை

மழைநீர் கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு: மேலமையூர் ஊராட்சியில், மழைநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, அனைத்து தெருக்களிலும், மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. இதில், கழிவுநீர் தேங்கி உள்ளது. முறையாக பராமரிக்காததால், கால்வாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, காலியாக உள்ள தனியார் வீட்டுமனைகளில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி, அருகிலுள்ள வீடுகளில் வசிப்போருக்கு காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, தொற்று நோய் ஏற்படும் முன், மழைநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை