மேலும் செய்திகள்
அட நம்புங்க... விளையாட்டு மைதானம் தாங்க!
23-Jan-2025
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே நெல்வாய்பாளையம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கிராம இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக 6 ஆண்டுகளுக்கு முன் ஊரகவளர்ச்சித்துறை சார்பாக 30 லட்ச ரூபாய் மதிப்பில், நடைபாதை, இறகுபந்து விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி மையத்துடன் கூடிய அம்மா பூங்கா அமைக்கப்பட்டது.அப்பகுதி இளைஞர்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தனர். கடந்த சில மாதங்களாக பராமரிப்பு இல்லாததால், உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்கள் பழுதடைந்தது. மக்கள் உடற்பயிற்சி மையத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. பூங்காவில் புதர்மண்டி நடைபாதை பயன்படுத்து முடியாத நிலையில் உள்ளது.மேலும் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து, சமூக விரோத செயலில் ஈடுபடுகின்றனர்.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து அம்மா பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
23-Jan-2025