உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு வழங்கிய பட்டாவை பதிவேற்ற கோரிக்கை

அரசு வழங்கிய பட்டாவை பதிவேற்ற கோரிக்கை

மறைமலைநகர்:திருக்கச்சூரில் அரசு வழங்கிய பட்டாவை அடங்கல் பதிவேடுகளில் பதிவேற்ற கோரி மக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர். மறைமலைநகர் நகராட்சி,19வது வார்டு, திருக்கச்சூர் அம்பேத்கர் நகர் பகுதியில்,81 குடும்பங்களுக்கு கடந்த 1995ல், 2.5 சென்ட் நிலம் ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக, வீட்டுமனைகளாக பிரித்து வழங்கப்பட்டது. இதில், அந்த மக்கள் வீடு கட்டி 30 ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில் இதுவரை அரசு பதிவேடுகளில் பதியவில்லை. மேலும் இப்பகுதிவாசிகள் சென்று வர முறையான பாதை வழி வசதி இல்லாமல் தனியார் நிலத்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, நேற்று செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: திருக்கச்சூர் கிராமத்தில் சர்வே எண்: 380ல், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டா இதுவரை அரசு பதிவேடுகளில் ஏற்றப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ