மேலும் செய்திகள்
லாட்டரி சூதாட்டம் நடத்திய நபர் கைது
13-Jun-2025
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், 35. மறைமலை நகர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில்,'ஸ்கிராப்' எனும் வீணாகும் பொருட்களை வாங்கும் தொழில் செய்து வந்தார்.இவர் நேற்று முன்தினம், தன், நண்பர்களான செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 45, ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சங்கர், 40, உள்ளிட்டோருடன், அனுமந்தபுரம் வனப்பகுதியில் பணம் கட்டி, சீட்டு விளையாட சென்றார்.அங்கு செல்வத்திற்கு ஏற்கனவே அறிமுகமான நபர்களுடன், சீட்டு விளையாடி பணம் சம்பாதித்து உள்ளனர். செல்வம், ராஜேஷ், சங்கர் உள்ளிட்டோர் தங்களை ஏமாற்றி வெற்றிபெறுவதை, எதிர் தரப்பு கண்டுபிடித்தனர்.இதனால், தாங்கள் தோற்ற 4 லட்சம் ரூபாயை திருப்பிக் கேட்டுள்ளனர். செல்வம் கொடுக்காததால், அவரை தாக்கி 'ஹூண்டாய்' காரில் கடத்திச் சென்றனர்.இது குறித்து ராஜேஷ், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.இந்த தகவல் மறைமலை நகர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, மகேந்திரா சிட்டியில் அந்த காரை, போலீசார் மடக்கி, செல்வத்தை மீட்டனர். காரில் இருந்தோரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார்,30, தாம்பரத்தை சேர்ந்த கணேஷ், 29, விமல், 28, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த புருஷோத்தமன், 31, எனு தெரிந்தது.இதையடுத்து, கடத்தல் வழக்கில் அவர்களை கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.சூதாட்டத்தில் ஈடுபட்ட செல்வம், ராஜேஷ், சங்கர், இவர்களது நண்பர் டில்லிபாபு உள்ளிட்டோரையும், சூதாட்ட வழக்கில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
13-Jun-2025