மேலும் செய்திகள்
க.பரமத்தி அருகே மணல் கடத்திய 4 பேருக்கு வலை
23-Jun-2025
சூணாம்பேடு:ஈசூரில் மணல் திருடிய இருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.சூணாம்பேடு அடுத்த ஈசூர் கிராமத்தில் உள்ள ஓங்கூர் ஆற்றில், மர்ம நபர்கள் இரவு நேரத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக, சூணாம்பேடு போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து, நேற்று முன்தினம் இரவு சூணாம்பேடு போலீசார், ஈசூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, ஈசூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், 37, மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த புருஷோத், 23, மற்றும் சூணாம்பேடு பகுதியை சேர்ந்த தேவராஜ், 23, ஆகிய மூவரும், மாட்டு வண்டியில் ஆற்று மணல் திருடியது தெரியவந்தது.இதையடுத்து பிரகாஷ் மற்றும் புருஷோத் ஆகிய இருவரையும் கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். தேவராஜ் அங்கிருந்து தப்பியோடினார்.பிரகாஷ் மற்றும் புருஷோத் இருவரையும் செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள தேவராஜை தேடி வருகின்றனர்.
23-Jun-2025