உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல் குவாரி பள்ளத்தில் விழுந்தவர் மீட்பு

கல் குவாரி பள்ளத்தில் விழுந்தவர் மீட்பு

பல்லாவரம்:பல்லாவரத்தை அடுத்த திரிசூலம், இலுப்பை தெருவை சேர்ந்தவர் கிருபை ராஜ், 27. சென்னை மாநகராட்சி தற்காலிக ஊழியர். நேற்று முன்தினம் இரவு அருகேயுள்ள, 150 அடி கல் குவாரி பள்ளத்தில் தவறி விழுந்தார். உறவினர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இரவு என்பதாலும், கல் குவாரி பள்ளம் செடி, கொடிகள் நிறைந்து காணப்படுவதாலும் உள்ளே இறங்கி தேட முடியாமல், திரும்பி சென்றனர். இந்த நிலையில், நள்ளிரவில் அவரது உறவினர்கள் பள்ளத்தில் இறங்கி தேடினர். அப்போது, செடியில் சிக்கி, தப்பிக்க போராடிக் கொண்டிருந்த கிருபை ராஜை மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ