கடப்பாக்கத்தில் சமுதாயககூடம் அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
செய்யூர், கடப்பாக்கம் பகுதியில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில், 7,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கடப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் ஆலம்பரைக்குப்பம், கடப்பாக்கம் குப்பம், வேம்பனுார், கோட்டைக்காடு, விளம்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.அதிக மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் சமுதாயக்கூடம் இல்லாததால், மக்கள் தங்களது குடும்ப நிகழ்ச்சிகளான நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்தநாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை ,தனியார் மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.தனியார் திருமண மண்டபங்களில் வாடகை 20,000 முதல் 50,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.இதனால் ஏழை, எளிய மக்கள் சுப நிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, பேரூராட்சி அதிகாரிகள் இப்பகுதி மக்களின் நலன் கருதி, கடப்பாக்கம் பகுதியில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். இதன் வாயிலாக பேரூராட்சி நிர்வாகத்திற்கும் வருவாய் கிடைக்கும். இதனால், கடப்பாக்கத்தில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.