உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்தில் தீப்பற்றி எரிந்த குப்பை பகுதிவாசிகளுக்கு மூச்சுத்திணறல்

மதுராந்தகத்தில் தீப்பற்றி எரிந்த குப்பை பகுதிவாசிகளுக்கு மூச்சுத்திணறல்

மதுராந்தகம்:மதுராந்தகத்தில், தனியாருக்குச் சொந்தமான வீட்டுமனையில் கொட்டப்பட்ட குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், அப்பகுதி புகை மண்டலமாக மாறி, பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட பார்த்தசாரதி தெருவில், தனியாருக்குச் சொந்தமான வீட்டுமனை உள்ளது.இங்கு குப்பைத் தொட்டி இல்லாததால், இப்பகுதியைச் சேர்ந்த நபர்கள், குப்பை மற்றும் வீட்டு உபயோக கழிவுகளை, இந்த மனையில் கொட்டி வந்தனர்.இதனால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது.இந்நிலையில், நேற்று நண்பகல் 12:00 மணியளவில், இங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைக்கு, மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.அதனால், இப்பகுதியே புகை மண்டலமாக மாறி, பகுதிவாசிகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.இது குறித்து, மதுராந்தகம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை