உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திம்மாவரத்தில் தேங்கும் கழிவுநீர் குடியிருப்புவாசிகள் தினமும் அவதி

திம்மாவரத்தில் தேங்கும் கழிவுநீர் குடியிருப்புவாசிகள் தினமும் அவதி

மறைமலை நகர், டிச. 7--காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திம்மாவரம் ஊராட்சியில், அன்னை தெரேசா நகர் உள்ளது. இது தாழ்வான பகுதி என்பதால், மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து தெருக்கள் மற்றும் காலிமனைகளில் தேங்குவது வழக்கம்.அந்த வகையில், தற்போது இப்பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்குவதால், பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது‍:அன்னை தெரேசா நகர் பகுதியில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், புதிதாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனர்.இந்த பகுதியில் உள்ள காலி மனையில் சிறிய அளவில் குளம் போல தண்ணீர் மற்றும் கழிவுநீர் தேங்கி உள்ளதால், சிரமமாக உள்ளது. விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால், அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீரை அகற்றவும், முறையாக கழிவுநீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ