உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் வரதராஜன் தெருவாசிகள் அவதி

மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் வரதராஜன் தெருவாசிகள் அவதி

செங்கல்பட்டு, செங்கல்பட்டு வேதாசலம் நகர், வரதராஜன் தெருவில், குடியிருப்பு மற்றும் வங்கிகள், கடைகள், தனியார் பள்ளி உள்ளன. இங்கு, சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய்கள் உள்ளன.மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம், நகரவாசிகள் புகார் அளித்தனர். அதன்பின், மழைநீர் கால்வாயை, கடந்த அக்., மாதம், நகராட்சி ஊழியர்கள் துார்வாரி சீரமைத்தனர்.இந்நிலையில், நேற்று பெய்த மழையில், மழைநீர் கால்வாயை முறையாக துார்வாராததால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஓடியது. அவ்வழியாக சென்ற அப்பகுதிவாசிகள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.தற்போது, மழைநீருடன் கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளதால், கொசு உற்பத்தி இடமாக மாறி, நகரவாசிகளுக்கு காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் சூழல் உள்ளது. எனவே, மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க, நகரவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ