உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கவுன்சிலர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்

கவுன்சிலர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்

செய்யூர்:இடைக்கழிநாடு பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், நேற்று நீக்கப்பட்டன. செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பனையூர் சின்னகுப்பம் மற்றும் பனையூர் பெரியகுப்பம் மீனவ மக்களிடையே, எல்லை பிரச்னை உள்ள சாலை அமைப்பது தொடர்பாக, கடந்த வாரம் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மேற்கண்ட இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் வட்டாட்சியர் அமைதி பேச்சு நடத்தினார். இதில், இடைக்கழிநாடு பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலரான, பனையூர் பெரியகுப்பத்தைச் சேர்ந்த வீரராகவன் பங்கேற்றார். பனையூர் பெரியகுப்பம் மற்றும் பனையூர் சின்னகுப்பம் மீனவர்களிடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில், அமைதி பேச்சில் கவுன்சிலர் வீரராகவன் பங்கேற்றது, கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொது இடத்தில் நடக்கக் கூடாது. யாரிடமும் பேசக்கூடாது என, வீரராகவன் மீது, பனையூர் பெரியகுப்பம் பஞ்சாயத்தார் கட்டுப்பாடு விதித்தனர். மேலும், ஊரில் இருக்க வேண்டுமென்றால், ஊர் மத்தியில் பஞ்சாயத்தார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என, நெருக்கடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து, வீரராகவன் நேற்று, செய்யூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தார். இந்நிலையில் நேற்று, செய்யூர் காவல் ஆய்வாளர் பாபு முன்னிலையில் பேச்சு நடத்தப்பட்டு, வீரராகவன் மீது விதிக்கப்பட்ட மேற்கண்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை