உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை, வடிகால் வசதி வேண்டும்

சாலை, வடிகால் வசதி வேண்டும்

வ ண்டலுார் ஊராட்சி, நான்காவது வார்டு, சிங்காரத் தோட்டம் பகுதியில் உள்ள மசூதி தெரு, ஈ.வெ.ரா., தெரு ஆகிய இரு தெருக்களிலும், 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை சேதமடைந்துள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. தவிர, மழைநீர் செல்ல வடிகால்வாய் வசதியும் இல்லை. மழைக்காலங்களில், அருகிலுள்ள தெருக்களிலிருந்து வரும் நீர், மசூதியைச் சுற்றி தேங்கி நிற்கிறது. இது, பல வாரங்கள் வரை வடியாமல், கழிவுநீராக மாறிவிடுகிறது. இதனால், தெரு முழுதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அத்துடன், கொசு உற்பத்தி மிகுதியாகி, இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மசூதி தெரு மற்றும் ஈ.வெ.ரா., தெருக்களில் சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.இப்ராஹிம், வண்டலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை