சாலையோர முட்செடி அகற்றம் வாகன ஓட்டிகள் நிம்மதி
திருப்போரூர்:சாலையோரம் வளர்ந்துள்ள முட்செடிகளை நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் அகற்றினர்.கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை இடையே புதுப்பாக்கம், மாம்பாக்கம், மேலக்கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இச்சாலையில் பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. தினசரி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இச்சாலையில் புதுப்பாக்கம் முதல் மாம்பாக்கம் வரை இருபுறம் சாலையோரங்களில் முட்செடிகள் வளர்ந்து உள்ளன. மேலும், சாலை ஓரம் ஆங்காங்கே உள்ள பள்ளம், மேடுகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன.முட்செடிகளை அகற்ற வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை ஓரம் உள்ள முட்செடி அகற்றும் பணி நடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.