உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாணவியரை சீண்டும் ரோமியோக்கள் செங்கையில் பாதுகாப்பு கேள்விக்குறி

மாணவியரை சீண்டும் ரோமியோக்கள் செங்கையில் பாதுகாப்பு கேள்விக்குறி

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியரிடம்,'ரோமியோ'க்கள் அத்துமீறுவதை தடுக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி செயல்படுகிறது. மேலும், அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என, 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன.இங்குள்ள கல்லுாரி, பள்ளிகளில், செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவியர் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி, கல்லுாரி முடிந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்களில், நீண்ட நேரம் காத்திருந்து பேருந்துகளில் வீட்டிற்குச் செல்கின்றனர்.மாணவியர் நீண்ட நேரம் காத்திருப்பதை பயன்படுத்தி, சமூக விரோத கும்பலைச் சேர்ந்த,'ரோமியோ'க்கள், மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து மாணவியர் தள்ளிச் சென்றாலும், பின்தொடர்ந்து வந்து துன்புறுத்துகின்றனர். குறிப்பாக, செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் மனநோயாளிகள் போர்வையில் திரியும் நபர்கள் சிலரும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.அந்த நேரத்தில், அப்பகுதியில் போலீசார் இல்லாததால், மாணவியர் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இச்சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுத்தால், பெரிய அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கலாம். மாணவியரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, காலை மற்றும் மாலை நேரங்களில், மாணவியர் பேருந்திற்காக காத்திருக்கும் பகுதிகளில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை