மேலும் செய்திகள்
கோயம்பேடில் கஞ்சா விற்றவர் கைது
20-Apr-2025
சென்னை, போதைப் பொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, திருவொற்றியூர் வன்னியர் தெருவில், போலீசார் கண்காணித்து வந்தனர்.அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி, 23, என்பவரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால், அவரது பையை சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகள் இருந்தன.அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது இரண்டு கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட நான்கு வழக்குகள் உள்ளன. இவர், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் இருந்து, போதை மாத்திரைகள் கடத்தி வந்து வீட்டில் மறைத்து வைத்து விற்றது தெரிந்தது. அவரிடமிருந்து, 1.50 கிலோ கஞ்சா, 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
20-Apr-2025