உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.38 லட்சம் மோசடி பெண் கைது

ரூ.38 லட்சம் மோசடி பெண் கைது

சென்னை : சென்னை, மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா, 34; டிராவல்ஸ் ஏஜன்சி நடத்தி வருகிறார். இவருக்கு, ஆவடி அடுத்த அரிக்கம்பேடு, சாலமன் நகரைச் சேர்ந்த சாந்தினி, 34, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சாந்தினி, வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல ஆட்களை அனுப்பினால், நல்ல கமிஷன் தருவதாக, ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்படி சந்தியா, தனக்கு தெரிந்தவர்கள் 15 பேரிடம், 38 லட்சம் ரூபாய் வசூல் செய்து, சாந்தினியிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சாந்தினி, வேலை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பித் தராமலும் ஏமாற்றியுள்ளார். கடந்த 2021ல், சந்தியா அளித்த புகாரின்படி, தலைமறைவாக இருந்த சாந்தினியை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி