உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் மழைநீர் கால்வாய் பணிக்கு ரூ.60 லட்சம் ஒதுக்கீடு

செங்கையில் மழைநீர் கால்வாய் பணிக்கு ரூ.60 லட்சம் ஒதுக்கீடு

செங்கல்பட்டு, செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகளில் மழைநீர் கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, நகரவாசிகள், நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.இதையடுத்து, பொது நிதியின் கீழ், சின்னம்மன் கோவில் தெருவில் புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு, 7 லட்சம் ரூபாயும், கங்கையம்மன் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு, 8.30 லட்சம் ரூபாயும், வடுகர் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு, 3.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.மேலும், அண்ணாசாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு 6 லட்சம் ரூபாய், ராஜாஜி தெருவில் புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு 5 லட்சம் ரூபாய், காண்டீபன் தெருவில் புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு 6 லட்சம் ரூபாய், அழகேசன் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு, 8.50 லட்சம் ரூபாய் என, மொத்தம் 59.3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்யப்பட உள்ளன.இப்பணிகளை செயல்படுத்த, நகர மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ