உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொங்கல் பண்டிகைக்கு மண்பானை விற்பனை

பொங்கல் பண்டிகைக்கு மண்பானை விற்பனை

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, மண்பானைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.மதுராந்தகம் சுற்றுப்புற கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளுடன் கொண்டாடப்படுகிறது.இவ்வாண்டு பொங்கலை முன்னிட்டு, மதுராந்தகம் மற்றும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் பகுதிகளில் இருந்து மண்பானைகள் வாங்கி வந்து, வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.வண்ண மண்பானை, 300 ரூபாய், சாதாரண மண்பானை 100 முதல் 200 ரூபாய் வரை, வேலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு விற்கப்படுகிறது.மண்பானைகளை உற்பத்தி செய்வோர் மற்றும் அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்யும் கடைகள் என, மதுராந்தகம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.பாரம்பரியமாக மண்பானையில் பொங்கலிடும் பழக்கம், கடந்து சில ஆண்டுகளாக குறைந்து வருவதால், எவர்சில்வர் மற்றும் வெண்கல பானைகள் ஆதிக்கத்தால், மண்பானைகள் விற்பனை குறைந்துள்ளதாக, வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ