உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சத்தியமங்கலம் சாலை சேதம் சீரமைக்க வேண்டுகோள்

சத்தியமங்கலம் சாலை சேதம் சீரமைக்க வேண்டுகோள்

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் இருந்து, நெடுமரம் கிராமத்திற்கு செல்லும், 2 கி.மீ., நீள தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையை, சத்தியமங்கலம், பெருமாள்சேரி, வேட்டக்காரகுப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.இந்த சாலை, 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், நாளடைவில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, மோசமாக சேதமடைந்து உள்ளது.அதனால், இச்சாலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், மழை காலத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சத்தியமங்கலம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை