உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பள்ளி செல்ல குழந்தை கணக்கெடுப்பு 3,205 மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு

பள்ளி செல்ல குழந்தை கணக்கெடுப்பு 3,205 மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறையினர் நடத்திய பள்ளி செல்லா குழந்தைகள் கணக்ககெடுப்பில், 5,461 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில், 3,205 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை வாயிலாக, மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், ஆறு முதல் 18 வயது வரையிலான பள்ளி செல்லா, இடைநின்ற, புலம் பெயர்ந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.இந்த கணக்கெடுப்பு பணியில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.பள்ளி செல்லா குழந்தைகளை கண்காணிக்க, பள்ளி மற்றும் வட்டார, மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களை மேற்பார்வையிட, செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், வருவாய் கோட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மாதத்திற்கு ஒரு முறை, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில், கணக்கெடுப்பின் வாயிலாக திரட்டப்பட்ட விவரங்கள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட குழந்தைகளை உடனுக்குடன் பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய, ஆறு வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், பள்ளியில் சேர்க்க வயது இருந்தும், இதுவரை பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்கும் பணி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கி நடந்து வருகிறது.மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில், 5,461 குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 3,205 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள, 2,256 மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில், ஈடுபட வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலருக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.மாவட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு கடந்த ஆண்டு அக்., மாதம் துவங்கி, நடத்தி வருகிறோம். கணக்கெடுப்பு நடத்தியதில், 3,205 மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளோம். மற்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.கல்வித்துறை அதிகாரிகள்,செங்கல்பட்டு.

வட்டாரம் பள்ளி செல்லா மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

அச்சிறுபாக்கம் 132 47மதுராந்தகம் 195 101சித்தாமூர் 232 173லத்துார் 185 133திருக்கழுக்குன்றம் 298 282திருப்போரூர் 819 461காட்டாங்கொளத்துார் 1,173 712 புனிததோமையார்மலை 2,427 1,296மொத்தம் 5,416 3,205


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை