உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பள்ளி மாணவன் கடத்தல்?

பள்ளி மாணவன் கடத்தல்?

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த, முள்ளிகொளத்துாரைச் சேர்ந்த ரமேஷ் மகன் கமலேஷ்குமார், 13. தந்தை வேறு பெண்ணை திருமணம் செய்து, தனியே சென்றதாக கூறப்படுகிறது. கமலேஷ் குமாரின் தாய் இறந்த நிலையில், பாட்டி சாந்தா வளர்ந்தார். கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம், அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார்.நேற்று முன்தினம் பள்ளிக்குச் செல்ல, காலை 8:00 மணிக்கு வீட்டில் இருந்து பஸ் நிறுத்தம் சென்றார். அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம், 'லிப்ட்' கேட்டு சென்றுள்ளார்; அதன் பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து, திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ